இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகள் மூடல்

இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு மற்றும் இதர நகரப் பகுதிகளில் செயல்படும் பள்ளிகளை மூட அந்நாட்டுக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளது .இந்த தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி , போக்குவரத்து முடக்கல் உள்ளிட்ட சிக்கல் நிலவி வருவதால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது .
இத்தகைய சூழலில் இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 1-ம் தேதி வரை கொழும்பு மற்றும் இதர நகர பகுதிகளில் செயல்படும் பள்ளிகள் மூடப்படுவதாக அந்நாட்டுக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதோடு எரிபொருள் தட்டுப்பாட்டால் ,ஜூன் 27 முதல் நடக்கவிருந்த தேர்வுகள், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
