அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்தது வங்கதேசம் அரசு..!

அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்தது வங்கதேசம் அரசு..!

அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியாவில் அரிசி விலை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பாசுமதி ரகம் அல்லாத அரிசியை ஜூன் 22ஆம் தேதி முதல் இறக்குமதி செய்வதற்கு வங்கதேசம் அனுமதி அளித்துள்ளது. 

மேலும், வழக்கமாக செப்டம்பர் மாதத்திலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் வங்கதேசம் மழை வெள்ளத்தால் உள்நாட்டு உற்பத்தி குறைந்ததால் முன்கூட்டியே அரிசி இறக்குமதி செய்கிறது.

இதனால், வங்கதேசத்தை ஒட்டியுள்ள மேற்குவங்கத்தில் அரிசியின் விலை 20 விழுக்காடும் பிற இடங்களில் 10 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்