ஜார்கண்டில் ரூ.1.30 லட்சத்திற்கு விற்கப்பட்ட 3 வயது குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஜார்கண்டில் ரூ.1.30 லட்சத்திற்கு விற்கப்பட்ட 3 வயது குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் தனது 3 வயது ஆண் குழந்தை காணாமல் போயுள்ளதாக குழந்தையின் பெற்றோர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காணாமல் போன குழந்தை கடைசியாக அவரது அத்தையின் வீட்டிலிருந்ததுள்ளது.
இதனை அறிந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான் அக்குழந்தையை பீகாரில் 3 குழந்தைகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்கு விற்றதாகக் கூறியுள்ளார். மேலும் குழந்தையை வாங்கிய பெண்ணுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதால் இந்த குழந்தையை விற்றதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தும்பூர் பகுதியிலிருந்து குழந்தை மீட்கப்பட்டு நேற்று இரவு குழந்தையின் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் மேரு கிராமத்தில் உள்ள குழந்தையின் அத்தை வீட்டிலிருந்து மொத்தம் ரூ.1.10 லட்சம் ரொக்கம் மீட்டனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட அத்தை மற்றும் குழந்தையை ரூ.1.30 லட்சத்திற்கு வாங்கிய பெண்ணும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.