அக்னிபாத் போராட்டம் அர்த்தமற்றது, எதிர்ப்பாளர்கள் யோகா செய்ய வேண்டும் - பாபா ராம்தேவ்

அக்னிபாத் போராட்டம் அர்த்தமற்றது, எதிர்ப்பாளர்கள் யோகா செய்ய வேண்டும் - பாபா ராம்தேவ்

அக்னிபாத் போராட்டம் அர்த்தமற்றது எனவும் எதிர்ப்பாளர்கள் யோகா செய்ய வேண்டும் எனவும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

ராணுவத்திற்கு ஆள் சேர்க்க அக்னிபாத் என்ற புதிய திட்டத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் இணைபவர்கள் 4 ஆண்டுகள் பணிபுரிவார்கள்.

பின்னர் அவர்களில் 75% பேர் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்களில் 25% பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ், "அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் "அர்த்தமற்ற அரசியல்". 

போராட்டக்காரர்கள் யோகா செய்திருந்தால், அவர்கள் தீக்குளித்திருக்க மாட்டார்கள், அவர்களும் யோகா செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

மேலும் அவர், "ஒரு சிலர் அராஜகத்தை பரப்புவதற்காக ஒரு நிகழ்ச்சி நிரலை நடத்துகிறார்கள். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை அகற்ற விரும்புகிறார்கள்" எனவும் குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்