அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடி

அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் -  பிரதமர் மோடி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மிக மோசமான கால கட்டங்களில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா துணையாக இருக்கும். தேவையான அனைத்து நிவாரணப் பொருள்களையும் விரைந்து வழங்கத் தயாராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்