பள்ளி ஆசிரியரானார் எம்.எல்.ஏ.,!

பள்ளி ஆசிரியரானார் எம்.எல்.ஏ.,!

ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 23 ஆண்டுகள் கழித்து ஆசிரியர் பணிக்கான அப்பாயின்மெண்ட் கிடைத்துள்ளது.

ஆந்திராவின் சோடவரம்  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கரணம் தர்மஸ்ரீ. இவர் கடந்த 1998ம் ஆண்டு சமூகவியல் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினார். அப்போது அவருக்கு பணி கிடைக்கவில்லை. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர், கடந்த 2004ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் தொடர்ச்சியாக தீவிர அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அப்போது அவருடன் தேர்வெழுதிய ஆசிரியர்கள் தங்களுக்கு அரசு பணியை ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனையடுத்து ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தகுதியான அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி வழங்க உத்தரவிட்டார். அந்த வரிசையில் தற்போது சோடவரம் சட்டமன்ற உறுப்பினர் கரணம் தர்மஸ்ரீக்கும் ஆசிரியர் பணிக்கான நியமன ஆணை அனுப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ”எனக்கு அப்போதே வேலை கிடைத்திருந்தால் கண்டிப்பாக ஆசிரியராக பணியில் சேர்ந்திருப்பேன். இந்த சமூகத்திற்கு சேவை செய்யும் புனிதமான தொழில் ஆசிரியர் பணி என்பது” எனக் கூறினார்.

மேலும், இவ்வளவு காலதாமதாக ஒரு முடிவை அதிகாரிகள் எடுத்திருப்பதால், தற்போது தம்முடன் தேர்வெழுதிய பலர் பல்வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். இதுபோன்ற காலதாமதம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்