இணைய பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை - அமித்ஷா

இணைய பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை - அமித்ஷா

இணைய பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார். 

டில்லியில் நடைபெற்ற 'இணைய பாதுகாப்பு மற்றும் தேச பாதுகாப்பு' கருத்தரங்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இணைய பாதுகாப்பு இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை. தேச பாதுகாப்புடன் இணைய பாதுகாப்பு பின்னிப் பிணைந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2012ல், 3377 இணைய குற்றங்கள்தான் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 2020ல் இது 50 ஆயிரமாக உயர்ந்து விட்டது. குற்றங்களை தடுப்போம்" எனவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்