தேசியம்
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - நாளை ஆய்வு செய்கிறார் அமித்ஷா
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - நாளை ஆய்வு செய்கிறார் அமித்ஷா
ஜம்மு காஷ்மீரில் பண்டிட் இனத்தவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் செய்யும் நிலையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமித் ஷா நாளை ஆய்வு செய்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் பண்டிட் இனத்தவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் செய்யும் நிலையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமித் ஷா நாளை ஆய்வு செய்கிறார்.
காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசரக் கூட்டம் கூட்டுமாறு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.