காங்கிரஸில் இருந்து விலகினார் மூத்த தலைவர் கபில் சிபல்..

காங்கிரஸில் இருந்து விலகினார் மூத்த தலைவர் கபில் சிபல்..

காங்கிரஸில் இருந்து விலகினார் மூத்த தலைவர் கபில் சிபல்..

காங்கிரஸில் இருந்து விலகினார் மூத்த தலைவர் கபில் சிபல்..

காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த கபில் சிபல் காங்கிரஸிலிருந்து விலகி மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தவர் கபில் சிபல். நீண்ட நாட்களாக காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த மூத்த தலைவர்கள் 23 பேர் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதனால் அவர்கள் ஜி-23 தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கபில் சிபல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தேர்தலையொட்டி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் நடத்தும் பாரத் ஜோதோ யாத்ரா குழுவை ஒருங்கிணைக்கவும், அரசியல் விவரக்குழு, தேர்தல் பணிக்குழு என மூன்று குழுக்களை அமைத்து காங்கிரஸ் தலைமை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அந்த குழுவில் ஜி-23 தலைவர்களில் பலரும் இடம்பெற்ற நிலையில் அதில் கபில் சிபல் இடம்பெறவில்லை.

இதனால் கடும் அதிருப்தியில் இருந்த கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, ராஜ்யசபா தேர்தலுக்காக சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடுவதாக கூறி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லக்னோவில் செய்தியாளரை சந்தித்து பேசிய கபில் சிபல் “ நான் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எனக்கு ஆதரவளித்த அகிலேஷ்ஜிக்கு நன்றி. மே 16ம் தேதி காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தேன். இனி காங்கிரஸ் மூத்த தலைவர் இல்லை'' என்றார்.

முன்னதாக காந்தி அல்லாத ஒருவரை கட்சியின் புதிய தலைவராக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த கபில் சிபல் நாங்கள் அனைவரும் கட்சி உறுப்பினர்களாக இருப்பதாலும், அந்தக் கட்சியின் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாலும் நாங்கள் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறோம். ஆனால் சுதந்திரமாக குரல் கொடுப்பது முக்கியம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், நாங்கள் கூட்டணி அமைத்து மோடி அரசை எதிர்க்க விரும்புகிறோம். பாஜகவை எதிர்க்கும் சூழலை உருவாக்க விரும்புகிறோம். அதற்காக நான் தனிப்பட்ட முறையில் செயல்படுவேன். மேலும், 2024 தேர்தலை குறிப்பிட்டு மோடி அரசின் குறைபாடுகள் மக்களை சென்றடையும் சூழல் உருவாக வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com