பால் பண்ணையில் தீ விபத்து; 20 பசுக்கள் உயிரிழப்பு!

பால் பண்ணையில் தீ விபத்து; 20 பசுக்கள் உயிரிழப்பு!

பால் பண்ணையில் தீ விபத்து; 20 பசுக்கள்
உயிரிழப்பு!

 டெல்லியில் உள்ள பால் பண்ணையில் ஏற்பட்ட
தீ விபத்தில் 20 பசுக்கள் கருகி உயிரிழந்தன.

 டெல்லியில் உள்ள ரோகினியின் சவ்தா கிராமத்தில்
உள்ள பால் பண்ணையில் இன்று மதியம் 1.25 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில்
20 பசுக்கள் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 தீ விபத்து தகவல் தெரியவந்ததை தொடர்ந்து,
சம்பவ இடத்திற்கு சுமார் 7 தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை கட்டுக்குள்
கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 அதற்குள் தீ மளமளவென பரவியதால், பண்ணையில்
இருந்த 20 மாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு
செய்துள்ள போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கடந்த மாதம், டெல்லி அருகிலுள்ள காஜியாபாத்தின்
இந்திரபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், குப்பைத் தொட்டியில் தீப்பிடித்து, அருகிலுள்ள
பசுக் கூடத்தில் தீப்பிடித்ததில் 38 பசுக்கள் இறந்தன. தீப்பிடித்த நேரத்தில் சுமார்
150 பசு மாடுகள் இருந்தன.

 

 

 

 

Find Us Hereஇங்கே தேடவும்