படிப்பிற்கு திருமணம் தடையில்லை: திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய புதுமணப்பெண்!

படிப்பிற்கு திருமணம் தடையில்லை: திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய புதுமணப்பெண்!

கர்நாடக மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமணப்பெண் பி.காம் தேர்வு எழுதினார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா லிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா வயது 19. இவர் பாண்டவபுராவில் உள்ள எஸ்.டி.ஜி. கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஐஸ்வர்யாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. அதே வேளையில் பி.காம் முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வும் நேற்று தொடங்கியது. 

படிப்புக்கு திருமணம் தடையாக இருக்கக் கூடாது எனக் கருதிய ஐஸ்வர்யா திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதச் செல்வதாகத் தனது கணவர் மற்றும் பெற்றோரிடம் கூறியிருந்தார்.

அதன்படி தாலிகட்டி முடிந்ததும் திருமண கோலத்தில் ஐஸ்வர்யா கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுதினார்

Find Us Hereஇங்கே தேடவும்