பிரபல மாடல் நடிகை மர்மமான முறையில் உயிரிழப்பு...!

பிரபல மாடல் நடிகை மர்மமான முறையில் உயிரிழப்பு...!

கேரளாவில் பிரபல மாடல் நடிகை ஷகானா மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ஷகானா என்பவர் பிரபல மாடல் அழகி ஆவார். திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள இவர், கோழிக்கோட்டை சேர்ந்த ஷாஜத் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கோழிக்கோட்டிலுள்ள கணவர் வீட்டில் ஷகானா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ஷகானாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆனதால் சந்தேகத்தின் பெயரில் ஷகானாவின் கணவர் ஷாஜத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஷாஜத் அடிக்கடி தன் மனைவியிடத்தில் சண்டை போட்டு வந்ததாகவும், இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் போலீசாரிடத்தில் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஷகானாவின் கணவரிடம் போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் தமிழில் ஜாலி பாஸ்டியன் என்ற சண்டைப் பயிற்சியாளர் இயக்கிய 'லாக் டவுன்' படத்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்