கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியது

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியது

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற தொடக்க நிலை நிறுவனங்களுக்கான கொள்கை மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 2014ஆம் ஆண்டு, நாட்டில் 300 முதல் 400 தொடக்க நிலை நிறுவனங்களே இருந்ததாக கூறிய பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட தொடக்க நிலை நிறுவனங்கள் 70 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார். 

மேலும் அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உறவினர்கள் தலையீடு, கொள்கை முடக்கம், மோசடி உள்ளிட்டவற்றால் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்