சாலையின் நடுவே நின்று புகைப்படம் எடுத்த இருவர் மீது கார் மோதி விபத்து...!

சாலையின் நடுவே நின்று புகைப்படம் எடுத்த இருவர் மீது கார் மோதி விபத்து...!

சாலையின் நடுவே நின்று புகைப்படம் எடுத்த இருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் சாலையில் நடுவே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இருவர் மீது கார் மோதி சென்ற காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

மலப்புரம் காவல் நிலையம் முன் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொண்டர்கள் இருவர் சாலையின் நடுவில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார், ஓட்டுநரின் கவனக்குறைவால் இவர்கள் மீது மோதிவிட்டுச் சென்றது. 

இதனையடுத்து காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்