இலங்கையில் பிரதமராக பதவியேற்ற முதல் நாளிலே ரணில் விக்ரமசிங்கேவிற்கு வந்த சோதனை

இலங்கையில் பிரதமராக பதவியேற்ற முதல் நாளிலே ரணில் விக்ரமசிங்கேவிற்கு வந்த சோதனை

இலங்கையில் பிரதமராக பதவியேற்ற முதல் நாளிலே ரணில் விக்ரமசிங்கேவிற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கு அரசின் தவறான நிர்வாகத்திறனே காரணம் எனக்கூறி மக்கள் அதிபர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இலங்கையின் பிரதமர் பதவி விலக வேண்டும் எனக்கூறி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தின் போது ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களுக்கும், போராட்டகாரர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக அதிக அழுத்தம் எழுந்த நிலையில் அவர் திங்களன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அதனைதொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். 6 வது முறையாக பதவியேற்ற முதல் நாளிலே பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதாவது 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இலங்கையில் மாறி, மாறி ஆட்சி அமைத்த ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டும் படுதோல்வியை சந்தித்தன. அதாவது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு இடம் கிடைத்த நிலையில், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

ஆனால், நியமன எம்.பிக்கள் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கே எம்.பி ஆனார். நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி மட்டுமே உள்ளார். அதுவும் ரணில் விக்ரமசிங்கே மட்டும்தான். இப்படி இருக்கின்ற நிலையில் வரலாற்றிலே முதல்முறையாக ஒற்றை எம்.பிக்கு அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் தோற்றுப்போனவருக்கு இலங்கையில் பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறி பதவியேற்ற முதல் நாளிலே ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்