நன்கு தூங்கி எழுந்த பின்னரே ரயிலை இயக்க முடியும்; ரயில் ஓட்டுனர் – பயணிகள் அதிர்ச்சி

நன்கு தூங்கி எழுந்த பின்னரே ரயிலை இயக்க முடியும்; ரயில் ஓட்டுனர் – பயணிகள் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுனர் ஒருவர், தூக்கமின்மையால் ரயிலை இயக்க மறுத்ததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பலாமு என்ற இடத்தில் இருந்து இயக்கப்படும் ரயில், வழக்கமான நேரத்தை விட மூன்று மணி நேரம் தாமதமாக நள்ளிரவு ஒரு மணியளவில் ஷாஜகான்பூர் ஐ சென்றடைந்தது.
இந்த ரயில் மறுநாள் காலை 7 மணிக்கு மீண்டும் புறப்பட வேண்டியிருந்த நிலையில், அதன் ஓட்டுநர் தனக்கு தூக்கமில்லை என்றும், நன்கு உறங்கிய பின்னரே ரயிலை எடுக்க முடியும் என்றும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
காலையில் உரிய நேரத்தில் அந்த ரயில் புறப்பட்டதால் ஷாஜஹான்பூர் ரயில் நிலையத்தில் ஏரளமான பயணிகள் காத்திருந்தனர். பின்னர் இரண்டரை மணி நேரம் தாமதமாக அங்கு வந்த ரயில் ஓட்டுநர் ரயிலை எடுத்துச் சென்றார்.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
