5 மாநில தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு!

5 மாநில தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு!

5
மாநில தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு!

 கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 மாநில சட்டசபை தேர்தலில் பொதுக்கூட்டங்கல்
நடத்த தலைமை தேர்தல் ஆணையம் 31 வரை தடை நீட்டிப்பு செய்துள்ளது.

 உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய
5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் உத்தரபிரதேசத்துக்கு மட்டும்
மே மாதம் முடிவடைகிறது மற்ற மாநிலங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் முடிவடைகிறது.

 இதையடுத்து பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை
தேர்தல் நடைபெறுகிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக
பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடக்கிறது.

 மணிப்பூரில் 2 கட்டமாகவும், உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும்
தேர்தல் நடக்கிறது. வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பால்
5 மாநில சட்டசபை தேர்தலில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை இன்றுடன்
முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரங்களில் ஈடுபட்டு
வந்தன.

 இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் இன்று 5 மாநில தேர்தல்
தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக் கூட்ட முடிவில் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு
ஜனவரி 31ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Find Us Hereஇங்கே தேடவும்