ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமிக்கப்படுவார்கள்

ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் - ராணுவ தலைமை தளபதி நரவானே..!

ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என ராணுவ தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். 

இந்திய ராணுவ தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ராணுவ தலைமை தளபதி நரவனே உள்ளிட்ட முப்படை தளபதிகள் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். 

ராணுவ தினத்தில் உரையாற்றிய ராணுவ தலைமை தளபதி நரவனே, "இந்திய ராணுவத்தில் விமானம் ஓட்டும் விமானிகளாக பெண்கள் நியமிக்கப்படுவார்கள். தேசிய பாதுகாப்பு அகாடமி மூலம் இந்த ஆண்டு பெண் அதிகாரிகளுக்கு பைலட் பயிற்சி அளிக்க முன்னுரிமை அளிக்கப்படும். இந்திய ராணுவத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Find Us Hereஇங்கே தேடவும்