உத்தரபிரதேச தேர்தல் - யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

உத்தரபிரதேச தேர்தல் - யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு..!

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளன. பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடவுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. இதன்படி, முதற்கட்ட தேர்தலில் 57 வேட்பாளர்களும்,  2வது கட்ட தேர்தலில் 38 வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா சிரது தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்