ஜனவரி 16ஆம் தேதி ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் - பிரதமர் மோடி

ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

ஸ்டார்ட் அப் கலாச்சாரம் நாட்டின் தொலைதூர பகுதிகளை சென்றடையும் நோக்கில் ஜனவரி 16ஆம் தேதியை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

2013-14இல் 4,000 காப்புரிமைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 28,000க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உலகில் இந்தியாவின் கொடியை உயர்த்தி வரும் அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்த்துகள் என்றும், ஸ்டார்ட் அப் கலாச்சாரம் நாட்டின் தொலைதூர பகுதிகளை சென்றடையும் நோக்கில் ஜனவரி 16ஆம் தேதியை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் எனவும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்