நாடு முழுவதும் சுனாமி போல் பரவும் கொரோனா பாதிப்பு..!

நாடு முழுவதும் சுனாமி போல் பரவும் கொரோனா பாதிப்பு..!

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,64,202 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12,72,073 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் நாடு முழுவதும் 315 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த பாதிப்பு நேற்றை காட்டிலும் இன்று 6.7% உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,72,073ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் நாடு முழுவதும் 315 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்தியா முழுவதும் 5,753 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்