உ.பி., தேர்தலுக்கான 172 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இறுதி செய்துள்ளது!

உ.பி., தேர்தலுக்கான 172 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இறுதி செய்துள்ளது!

உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கிடையில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வில் இருந்து அதிருப்தி தலைவர்கள் அடுத்தடுத்து விலகுவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 172 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக வியாழன் அன்று இறுதி செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள தகவல்களின்படி அயோத்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும், சிரத்து தொகுதியில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவையும் பாஜக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கட்சி தரப்பில் அடுத்த சில நாட்களில் பாஜக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்