தேசியம்
இயற்கை விவசாயத்துக்கு திரும்ப பிரதமர் மோடி வலியுறுத்தல்..!
இயற்கை விவசாயத்துக்கு திரும்ப பிரதமர் மோடி வலியுறுத்தல்..!
ரசாயன சோதனை சாலையில் இருந்து விவசாயத்தை மீட்க வேண்டும்.
ரசாயன சோதனை சாலையில் இருந்து விவசாயத்தை மீட்டு இயற்கை எனும் சோதனை சாலையுடன் இணைக்க வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் தொடர்பான மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, "விதைகள் முதல் மண்வளம் வரை அனைத்துக்கும் இயற்கை வழியில் தீர்வு காண முடியும்.
இயற்கை விவசாயத்தின் மூலம் சிறு விவசாயிகள் 80% பேர் பயனடைவார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தற்போது இந்தியாவில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் விளைவாக தேசம் மற்றும் சாமானியர்கள் மீது பொருளாதார சுமை அதிகரித்துள்ளது" என்றார்.