ஆபத்தில் இருக்கும் இந்தியா - மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

ஆபத்தில் இருக்கும் இந்தியா - மருத்துவ நிபுணர் எச்சரிக்கை..!
ஆபத்தில் இருக்கும் இந்தியா - மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

இந்தியா ஆபத்தில் இருப்பதாக மருத்துவ நிபுணர் எச்சரிக்கை.

ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியா ஆபத்தில் இருப்பதாக மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 73 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது என உயர் சுகாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். அடுத்த 2 மாதங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா உச்சம் அடையும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் அசோக் சேத், "ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் பூஸ்டர் டோஸ் போட்டால் மட்டுமே பாதுகாப்பு என்பதை மேற்கத்திய நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் நாம் உண்மையாகவே ஆபத்தில் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com