ஒமிக்ரான் - விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்

ஒமிக்ரான் - விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்

இரு மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். 

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் 55% கொரோனா பாதிப்புகள் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பதிவாகிறது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். 

ஒமிக்ரான் பரவல் குறித்து அச்சம் அடையத் தேவையில்லை. அதேவேளையில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். 29 நாடுகளில் இதுவரை 373 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான் எனவும் அவர் கூறியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்