அதிக சேதத்தை ஏற்படுத்துமா ஜாவத்! முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

அதிக சேதத்தை ஏற்படுத்துமா ஜாவத்! முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

அதிக சேதத்தை ஏற்படுத்துமா ஜாவத்! முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

ஜாவத் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியை வரும் 4ம் தேதி நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மேலும், இந்த புயலுக்கு, ஜாவத் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல், அதனை ஒட்டிய தென் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 110கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Find Us Hereஇங்கே தேடவும்