முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறி வருகிறது

முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மாறி வருகிறது உத்தரபிரதேசம் - பிரதமர் மோடி..!

பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதே மாநிலம் நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் உத்தரபிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். 

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, "உத்தரபிரதேசம் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பமான இடமாக மாறி வருகிறது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் முயற்சிகளால் நாட்டின் மிகவும் இணைக்கப்பட்ட பிராந்தியமாக உத்தரபிரதேசம் மாறுகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது அரசியல் லாபத்திற்கானது அல்ல, தேசிய கொள்கைகளில் அதுவும் ஒன்றே. உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை பாஜக அரசு சரியான நேரத்தில் நிறைவேற்றுகிறது" என்றார்.

Find Us Hereஇங்கே தேடவும்