கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்க முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு..!

கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

காற்று மாசு காரணமாக டெல்லி - என்சிஆர் பகுதியில்  கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள  இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (பிளம்பிங், மின் வேலைகள், உள் அலங்காரம்) கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரிய நிதியத்தில் இருந்து குறைந்தபட்ச ஊதியம் வழங்க டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

இதையடுத்து, காற்று மாசு காரணமாக கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வேலையிழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்