ஆசியாவிலேயே நம்பர் 1 பணக்காரர் ஆனார் அதானி!

ஆசியாவிலேயே நம்பர் 1 பணக்காரர் ஆனார் அதானி!

ஆசிய அளவிலான பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் கவுதம் அதானி.

ப்ளூம்பெர்க் தளத்தின் தரவுகள் அடிப்படையில் முகேஷ் அம்பானி 90 பில்லியன் டாலருடனும், கவுதம் அதானி 88.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்தாலும் ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டைக் கணக்கிடும் போது முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெருன் பணக்காரராக உயர்ந்துள்ளார். 

இதற்கு காரணம் அதானி குழுமத்தின் பங்குகள் புதிய உச்சத்தை எட்டியதே காரணம் என்று நிதித் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக ரிலையன்ஸ் நிறுவனத்தில் சவுதி ஆரோம்கோ நிறுவனம் முதலீடு செய்யவில்லை என்று முடிவு செய்த பிறகு ரிலையன்ஸ் குழும பங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன.

அதேசமயம், அதானி குரூப் நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2.94 சதவீத உயர்வுடன் அதானி எண்டர்பிரைசர்ஸ், 4.87 சதவீத உயர்வில் அதானி போர்ட்ஸ், 0.50 சதவீத உயர்வில் அதானி டிரான்ஸ்மிஷன், 0.33 சதவீத உயர்வில் அதானி பவர் பங்குகள் உள்ளது.

இதன்மூலம் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பும் ரிலையன்ஸ் குழுமத்தின் மதிப்பை விடவும் அதிகரித்துள்ளது. இதனால் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரராக உயர்ந்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்