தண்ணீர் வடியும் பைப்புக்குள் கட்டுக்கட்டாக பணம்

கர்நாடகாவில் ரெய்டு - தண்ணீர் வடியும் பைப்புக்குள் கட்டுக்கட்டாக பணம்..!

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் தண்ணீர் வடியும் பைப்புகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பணம், தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் ஊழல் தடுப்பு படையினர் இன்று (நவ.24) மாநிலம் முழுவதும் 60 இடங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வெளியான தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பொதுப்பணித்துறை பொறியாளர் சாந்தா கவுடா என்பவருக்கு சொந்தமான வீட்டில் உள்ள தண்ணீர் பைப்புகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் பல கிலோ தங்க நகைகளையும் ஊழல் தடுப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது  சோதனை நடந்துகொண்டிருப்பதால் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை.

Find Us Hereஇங்கே தேடவும்