இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேவையா?: ஓவைசி

எல்லையில் வீரர்கள் மரணம்: இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேவையா?: அசாதுதீன் ஓவைசி கேள்வி..!

எல்லையில் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேவையா? என அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். 

ஏஐஎம்ஐஎம் கட்சியின் நிறுவன தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசுகையில், "பிரதமர் மோடி இரண்டு விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சீன ராணுவம் லடாக் பகுதியில் ஊடுருவல். 

வரும் 24ஆம் தேதி இந்திய அணி, பாகிஸ்தானுடன் T 20 போட்டியில் விளையாட தயாராகி வருகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் நாள்தோறும் நமது வீரர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் போட்டி தேவையா?" என வினவியுள்ளார். 

Find Us Hereஇங்கே தேடவும்