சிப்ஸ் கேட்டவருக்கு உருளைக்கிழங்கு கொடுத்த பிரிட்டன் உணவகம்!!

சிப்ஸ் கேட்டவருக்கு உருளைக்கிழங்கு கொடுத்த பிரிட்டன் உணவகம்!!

உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆர்டர் செய்த ஆசிரியருக்கு முழு உருளைக் கிழங்கையே அனுப்பி பிரிட்டன் உணவகம் ஷாக் கொடுத்துள்ளது. 

இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் பாய்ஸ், ஒரு இயற்பியல் ஆசிரியர். அவரது கெட்டில் சிப்ஸ் பாக்கெட்டில் ஒரு முழு உருளைக்கிழங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலையதளங்களில் வைரலானது. 

இதையடுத்து அந்த நிறுவனத்தின் சார்ப்பில்  சேவைக்கு வருத்தம் தெரிவித்து இருந்தது , மேலும் இது குறித்து  உரிய நடவடிக்கை எடுப்பதாக உணவக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளார். 

Find Us Hereஇங்கே தேடவும்