ஒருவர் கூறிய பதிலிற்கா தேசியஅளவில் விவாதம்? –சோமெட்டோ நிறுவனர் சர்ச்சை கருத்து…

ஒருவர் கூறிய பதிலிற்கா தேசியஅளவில் விவாதம்? –சோமெட்டோ நிறுவனர் சர்ச்சை கருத்து…

வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து ஒருவர் செய்த தவறு தேசிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து ஒருவர் கூறிய தவறான பதில், ஒட்டுமொத்த நிறுவனத்தையும் சிக்கலில் சிக்கவைத்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்திருந்த சொமேட்டோ நிறுவனம், மொழி குறித்தான புரிதலின்றி பதிலுரத்திருந்தவரையும் பணி நீக்கம் செய்திருந்தது.

இதையடுத்து இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல், வாடிக்கையாளர் மையத்திலிருந்து யாரோ அறியாத ஒருவர் செய்த தவறு தேசிய பிரச்னையாக மாறியிருப்பதாகவும், மேலும், இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து விடுவிப்பது ஏற்புடையதல்ல எனவும், அவரை நாங்கள் மீண்டும் பணியமர்த்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல தவறிழைத்தவருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ள அவர், எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள் எனவும், பிராந்திய மக்களின் உணர்வுகளையும், மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு யாரும் நிபுணர்கள் அல்ல என தெரிவித்துள்ள அவர் தானும்தான் என்று தனது அறியாமையை சுய பிரகடனம் செய்துகொண்டுள்ளார்.

மேலும், மற்றவர்களின் செயல்களில் இருக்கும் குறைகளை பொறுத்துக்கொண்டு, மற்றவர்களுடைய மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்றும் தீபிந்தர் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்

இறுதியாக, இந்தியாவின் மற்ற பகுதிகளை எப்படி நேசிக்கிறோமோ அதேபோல்தான் கொஞ்சமும் கூடாமலும் குறையாமலும் தமிழ்நாட்டையும் நேசிப்பதாக தெரிவித்துள்ள அவர் எந்தளவுக்கு பாகுபாடுகளை தாங்கியிருந்தாலும், அந்தளவுக்கு ஒருமைப்பாட்டையும் தாங்கி நிற்கிறோம்

Find Us Hereஇங்கே தேடவும்