கொலை வழக்கு: குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு: குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை..!

மேலாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆசிரமத்தை குர்மீத் ராம் ரஹீம் சிங் நடத்தி வந்தார். 2002ஆம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் (வயது 19) திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பூரா சச் என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானதால் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2002ஆம் ஆண்டு 19 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்