விதிமீறலில் ஈடுபடும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: சுட்டிகாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்!..

விதிமீறலில் ஈடுபடும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: சுட்டிகாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்!..

மத்திய அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர்களை நிரப்புவதில் விதிகள் மீறப்பட்டுவருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பராமரித்து வரப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களில் அரசியலமைப்பின் பிரிவு 16 மீறப்படுவதாக பதிவிட்டுள்ள வில்சன், இடஒதுக்கீட்டு முறையை புறந்தள்ளி சட்டவிரோதமாக walk-in முறையில், ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் நடைபெற்றுவருவதாக வலுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், இந்த பின்வாசல் வழியான நியமனங்கள் யாருக்காக என கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்

Find Us Hereஇங்கே தேடவும்