நீட் தேர்வு ரத்து: ஒடிசா முதல்வருடன் கனிமொழி சந்திப்பு

நீட் தேர்வு ரத்து: ஒடிசா முதல்வருடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு..!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது தொடர்பான கடிதத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் கனிமொழி எம்பி வழங்கினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவை திரட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தான் எழுதிய கடிதம் மற்றும் நீதியரசர் ஏ.கே.ராஜன் பரிந்துரை நகலை பல்வேறு மாநில முதலமைச்சர்களிடம் வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்-கை சந்தித்து நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் எழுதிய கடிதம் மற்றும் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி வழங்கினார்.

Find Us Hereஇங்கே தேடவும்