மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் மம்தா பேச்சு

நான் இந்துக்களுக்கான பிரதிநிதியாக சென்றிருக்கலாம்: அமைதி மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் மம்தா பானர்ஜி பேச்சு..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இத்தாலியில் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. 

இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.

இது தொடர்பாக பேசியுள்ள மம்தா பானர்ஜி, "உலக அமைதி மாநாட்டில் முஸ்லீம், கிறிஸ்துவ பிரதிநிதிகள் இருப்பார்கள். நான் இந்துக்களுக்கான பிரதிநிதியாக சென்றிருக்கலாம். அப்படி இல்லாவிட்டாலும் நான் அனைத்து மதத்தினருக்கான பிரதிநிதி. என்னைப் பொறுத்தவரை மனிதநேயம் மட்டுமே முதன்மை" என கூறியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்