துடிப்பான ஜனநாயகத்துக்கு இந்தியா சிறந்த உதாரணம்

துடிப்பான ஜனநாயகத்துக்கு இந்தியா சிறந்த உதாரணம்: ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை..!

துடிப்பான ஜனநாயகத்துக்கு இந்தியா சிறந்த உதாரணமாக உள்ளது என ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

ஐ.நா. சபையின் 76 ஆவது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நான் ஜனநாயத்தின் தாயாக கருதப்படும் இந்தியாவில் இருந்து வந்துள்ளேன். ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். தனது தந்தைக்கு டீக்கடையில் உதவியாக இருந்த சிறுவன் இன்று ஐக்கிய நாடுகள் சபையில் பேசிக்கொண்டிருக்கிறான் என்றார்.

உலகில் உள்ள அனைத்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும், இந்தியாவில் வந்து தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். துடிப்பான ஜனநாயகத்துக்கு இந்தியா சிறந்த உதாரணமாக உள்ளது. எங்களது ஜனநாயகம் அதன் பன்முகத்தன்மையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக எடுப்பவர்கள், அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்" என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்