கட்டட தொழிலாளியின் மகள் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி!

கட்டட தொழிலாளியின் மகள் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி!

கட்டட தொழிலாளியின் மகளான திருவனந்தபுரத்தை சேர்ந்த அஸ்வதி குடிமைப்பணி தேர்வில்(UPSC) தேசிய அளவில் 481வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

(UPSC) தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது.இந்நிலையில் சாதிக்க வறுமை தடை இல்லை என்பதை உறுதி படுத்தியுள்ளார் இந்த மாணவி அஸ்வதி.இது என்னுடைய 15 ஆண்டுக்கால கனவு என்றும் ஐஏஎஸ் அதிகாரியாவதே எனது லட்சியம் என்பதால் மீண்டும் தேர்வெழுத உள்ளேன் என  அஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் 2020ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில், இந்திய அளவில் 750வது இடத்தை பெற்று கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ரஞ்சித் அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Find Us Hereஇங்கே தேடவும்