அக்டோபர் 22 முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

மகாராஷ்டிராவில் அக்டோபர் 22 முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கிராமப்புறங்களில் 5 முதல் 12ஆம் வகுப்பு வரையும், நகரங்களில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 7 முதல் அனைத்து கோவில்களும் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் அலுவலகம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அலுவலகம் தெரிவித்துள்ளது. தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்