மருத்துவ சேர்க்கையில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு

மருத்துவ சேர்க்கையில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து..!

மருத்துவ சேர்க்கையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்ற ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  

மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ சேர்க்கையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன் உச்சநீ திமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தனது விசாரணை வரம்பை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்