அடுத்த விமானப்படை தலைவராக ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி நியமனம்

அடுத்த விமானப்படை தலைவராக ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி நியமனம்..!

ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி அடுத்த விமானப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவுரியா செப்டம்பர் 30ஆம் தேதி அன்று ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக துணை விமானப்படை துணை தலைவராக இருக்கும் ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில், "ஏர் மார்ஷல் வி ஆர் சவுத்ரி, அடுத்த விமானப்படை தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்