6 மாநிலங்களில் 100% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி

ஆறு மாநிலங்களில் 100% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் இதுவரை 66% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது தொடர்பாக பேசிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், "லட்சத்தீவு, சண்டிகர், கோவா, இமாச்சல பிரதேசம், அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் சிக்கிம் ஆகிய ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சுமார் 66% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இது தவிர, மக்களில் 23% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றார்.

Find Us Hereஇங்கே தேடவும்