கணவன் வருவதை பார்த்து, "ஐ லவ் யூ" சொல்லிவிட்டு மாடியிலிருந்து குதித்த மனைவி!..

கணவன் வருவதை பார்த்து,

டெல்லி நகரில், 52 வயது நிரம்பிய நேகா வர்மா  ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைப் பார்க்க நேர்கையில், தன் கணவர் அடுக்கக குடியிருப்பிற்குள் நுழைவதை கவனித்த பின்னர் தான் மாடியிலுருந்து அப்பெண்மணி குதித்ததாக தெரிவித்துள்ளனர். அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் அவரைவிட்டு பிரிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேகாவிற்கும், அவரது கணவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளநிலையில், இருவரும் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும், இந்த வயதான தம்பதியினர் பிரிந்து வாழ முடிவெடுத்திருந்தாகவும் தெரிகிறது.

காவல்துறை விசாரணையில், மாடியிலிருந்து குதிப்பதற்கு கொஞ்ச நேரத்துக்கும் முன்னமே தனது கணவருக்கு நேகா ”ஐ லவ் யூ” என்ற குறுந்தகவலை அனுப்பிவிட்டு இவ்வுயிர் துறக்கும் முடிவை எடுத்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்