இந்திய மீனவர்களிடம் மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை!.. – எப்போதுதான் தீர்வு எட்டப்படும்?

இந்திய மீனவர்களிடம் மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை!.. – எப்போதுதான்  தீர்வு எட்டப்படும்?

ராமேஸ்வர மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் மீண்டும்  தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்துள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள்  மீது இலங்கை கடற்படையினர்  கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி, மேலும் பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலிருந்த மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து, மீன்பிடியிலில் ஈடுப்பட்டிருந்தவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்து அத்துமீறலில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அப்பாவி மீனவர்களின் மீது அதிகார அத்துமீறலில் ஈடுபடுவது ஆண்டாண்டு காலமாக அரங்கேறிவருகிறது. ஆனால் இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர அரசுகள் எந்தவொரு தீவிர நடவடிக்கையையும் எடுக்காது, கண்டும் காணாமல் மெளனம் சாதிக்கின்றன.

Find Us Hereஇங்கே தேடவும்