மத்திய பிரதேசத்தில் ஒவர் நைட்டில் லட்சாதிபதியான நபர்.!

மத்திய பிரதேசத்தில் ஒவர் நைட்டில் லட்சாதிபதியான நபர்.!

மத்திய பிரதேச மாநிலம், பன்னாவில் அமைந்துள்ள வைர சுரங்கங்களில் பலரும் அரசு அனுமதியுடன் குத்தகைக்கு வாங்கு அங்கு தோண்டி எடுப்பார்கள். அப்படியெடுக்கும் வைரங்கள் ஏலம் விட்டு அதில் வரும் பணம் உரியவர்களிடம் கொடுக்கப்படும். அவர்கள் அரசுக்கு கட்டணம், வரிகள் செலுத்தினாலே போதும்.

அந்த வகையில், பன்னாவில் ரத்தன்லால் பிரஜாபதி என்ற நபர் 8.22 கேரட் மதிப்புள்ள ஒரு வைரத்தை சமீபத்தில் தோண்டி கண்டறிந்துள்ளார். அதனை ஏலம் விடப்பட்டப் போது அந்த வைரத்திற்கு ரூ.37.07 லட்சம் கிடைத்தது. இதனால் பிரஜாபதி ஒரே நாளில் லட்சாதிபதியாகியுள்ளார். 

இந்த வைரத்தையும் சேர்த்து மொத்தம் 61 வைரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 27 லட்சத்து 71 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்