ஒருவேளை நான் வீழ்த்தப்பட்டாலும், வேறொருவர் முதல்வராவர்: மேற்குவங்க முதல்வர் மம்தா!..

ஒருவேளை நான் வீழ்த்தப்பட்டாலும், வேறொருவர் முதல்வராவர்: மேற்குவங்க முதல்வர் மம்தா!..

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாவனிப்பூர் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளார். இதையொட்டி, பாவனிப்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய பரப்புரையில், தான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் வேறு யாராவது முதல்வர் பொறுப்பை ஏற்பர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பரப்புரையில் தன்னை மக்களின் பாதுகாவலராக பிரகடனப்படுத்திக்கொண்ட அவர், நந்திகிராமில் தோற்கடிக்கப்பட்டது எவ்வாறான அரசியல் சூழ்ச்சி என்பது அனைவரும் அறிந்ததே, அவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளநிலையில், மீண்டும் வாக்கு கேட்டு மக்கள் முன் நிற்பதாகவும், மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததெனவும் தெரிவித்துள்ளார்.

பவானிப்பூர் இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அங்குள்ள அரசியல் விமர்சகர்கள், மம்தாவின் இந்தப்பேச்சு தேர்தல் முடிவுகள் குறித்து அவருக்கு ஏற்பட்டுள்ள பதட்டத்தின் வெளிப்பாடே எனவும், இதுபோன்றதொரு சூழ்நிலையை அவர் எதிர்கொள்வது இதுவே முதன்முறை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், பாவனிப்பூரில் அவரின் வெற்றி என்பதை உறுதியாக கூறிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்

Find Us Hereஇங்கே தேடவும்