அக்.4 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: புதுச்சேரியில் தொடங்கியது வேட்புமனுதாக்கல்…

அக்.4 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: புதுச்சேரியில் தொடங்கியது வேட்புமனுதாக்கல்…

புதுச்சேரிக்கு வரும் 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று முதல் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை, தமிழகம் மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு காரணங்களால்  காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். 

புதுச்சேரியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் மாதத்தோடு முடியவுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்  இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலை வரும் 22ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும், வரும் 23ஆம் தேதி  மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 4ல் வாக்குப்பதிவு தேர்ந்தேடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்கு பதியப்படவுள்ள நிலையில், இன்று தொடங்கிய வேட்பு மனு தாக்கலில்,புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருகம்பாக்கத்தை சேர்ந்த அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 41 வயதான இவர்,41 வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை பாராளுமன்றம், சட்டமன்றம், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மேயர் பதவிகளுக்கு 2009ஆம் ஆண்டு முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்