ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது; 44 பேர் சென்டம்

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது; 44 பேர் சென்டம்

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்த தேர்வு ஆண்டுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் என 4 முறை நடைபெறும்.

இந்நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதி கொரோனாவுக்கு மத்தியில் ஜேஇஇ தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளை தேர்வு தேசிய முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று உள்ளதாகவும் 18 பேர் முதலிடம் பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேபி தேர்வு முடிவுகளை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்