சதி திட்டம் தீட்டிய 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது

சதி திட்டம் தீட்டிய 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது..!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டிய 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 6 பேரில், இருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகளின்போது கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நகரங்களில் சதிவேலையில் ஈடுபட திட்டம் தீட்டியதாக போலீசார் கூறினர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்